உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  நுங்கு பறிக்க பனைமரத்தில் ஏறியவர் தவறி விழுந்து பலி

 நுங்கு பறிக்க பனைமரத்தில் ஏறியவர் தவறி விழுந்து பலி

அன்னூர், ஊத்துப்பாளையம் விவசாயி கிட்டான் தோட்டத்தில் நிறைய பனை மரங்கள் உள்ளன. அவர் 30 அடி உயர பனை மரத்தில் ஏறி நொங்கு பறிக்க முயன்றபோது, தவறி விழுந்து காயம் அடைந்தார். உறவினர்கள் அவரை ஆட்டோவில் ஏற்றி அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பரிசோதித்த மருத்துவர், வழியிலேயே கிட்டான் இறந்து விட்டார் என தெரிவித்தார். உடல் பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அன்னூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ