உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை

தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை

சூலுார்; ஸ்ரீ தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜையையொட்டி சங்காபிஷேகம் நடந்தது. ரங்கநாத புரத்தில் உள்ள ஸ்ரீ தங்கமுத்து மாரியம்மன் கோவில் பழமையானது. இங்கு, கும்பாபிஷேக விழா முடிந்து, தினமும் மாலை, மண்டல பூஜை நடந்தது. 48வது நாள் மண்டல பூஜை நிறைவை ஒட்டி, 108 சங்காபிஷேக பூஜை நடந்தது. முன்னதாக, பல்வேறு மூலிகை திரவியங்களை கொண்டு, மண்டல பூஜை ஹோமம் நடந்தது. தொடர்ந்து புனித நீர் நிரம்பிய சங்குகளுக்கு பூஜை நடந்தது. பால், தயிர், பன்னீர், இளநீர் அபிஷேகம் முடிந்து, 108 சங்காபிஷேகம் நடந்தது. அலங்கார தீபாராதனைக்குப்பின், பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை