மேலும் செய்திகள்
தேர் திருவிழா இன்று துவக்கம்
03-Jan-2025
அன்னுார், ; அன்னுார் மன்னீஸ்வரர் கோவில், 25ம் ஆண்டு தேர்த் திருவிழா கடந்த 3ம் தேதி கிராம தேவதை வழிபாடுடன் துவங்கியது. கடந்த 4ம் தேதி கொடியேற்றம் நடந்தது. 5ம் தேதி காலை சூரிய வாகனத்தில் மன்னீஸ்வரர் உலா நடந்தது. இரவு 7:30 மணிக்கு, அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரர், தர்மர் கோவில் வீதி, சத்தி ரோடு, கடை வீதி, ஓதிமலை ரோடு வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது.ஏராளமான பக்தர்கள் செல்லும் வழியெங்கும் தண்ணீர் ஊற்றி மன்னீஸ்வரருக்கு வரவேற்பு அளித்தனர். கயிலை வாத்தியம் திருவீதியுலாவில் இசைக்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. வரும் 7ம் தேதி இரவு புஷ்ப பல்லக்கில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது.வரும் 8ம் தேதி காலை பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும், மாலையில் முருகர், விநாயகர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளின் திருவீதி உலா நடக்கிறது. வரும் 9ம் தேதி காலை திருக்கல்யாண உற்சவமும், வரும் 10ம் தேதி காலை 10:00 மணிக்கு தேர் வடம் பிடித்தலும் நடைபெறுகிறது.
03-Jan-2025