மேலும் செய்திகள்
காலமானார் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது
20 minutes ago
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்
38 minutes ago
ஜன., 3ல் ஆருத்ரா தரிசனம்
1 hour(s) ago
அசத்தலான அசைவ விருந்துடன் கிறிஸ்துமசை கொண்டாடலாம்
1 hour(s) ago
கோவை:கொசு புழுக்களை அழிக்கும் மருந்து தட்டுப்பாடு உள்ளதால் மாநகராட்சி பகுதிகளில், நோய் தடுப்பு நடவடிக்கைகள் கேள்விக்குறியாகி உள்ளன.மாநகராட்சி பகுதிகளில் குறிப்பாக, பருவமழை சமயத்தில் டெங்கு உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தொட்டிகளில் 'அபேட்' மருந்து தெளித்தல், கொசு புகை மருந்து அடித்தல் பணிகள் தீவிரப்படுத்தப்படுகின்றன. சாக்கடை மற்றும் தேங்கி நிற்கும் கழிவு நீரில் உற்பத்தியாகும் கொசுக்களை அழிக்க, 'பேசில்லஸ் துரஞ்சியன்ஸ்' மருந்து பயன்படுத்தப்படுகிறது.கடந்தாண்டு இறுதி முதல் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. எனவே, ஏற்கனவே வழங்கப்பட்ட மருந்துகள் பயன்படுத்தப்பட்டு, தற்போது இருப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இதனால், வார்டுகளில் கொசுப்புழுக்கள் அழிப்பு நடவடிக்கைகளில், தொய்வு ஏற்பட்டுள்ளது.மாநகராட்சி சுகாதார பிரிவினர் கூறுகையில், 'தற்போது கொசுப்புழுக்கள் அழிப்பு மருந்துகள், மண்டல அலுவலகங்களில் போதிய இருப்பு இல்லை. எனவே, ஐந்து மண்டலங்களுக்கும் தலா, 200 கிலோ வீதம், 1,000 கிலோ 'பேசில்லஸ் துரஞ்சியன்சிஸ்' மருந்து வாங்கவுள்ளோம். வந்தவுடன் கொசுப்புழு அழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்' என்றனர்.
20 minutes ago
38 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago