உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இறைச்சி கழிவுகள் அகற்றம்

இறைச்சி கழிவுகள் அகற்றம்

காரமடை: காரமடை - மேட்டுப்பாளையம் சாலையில், மின் மயானத்தின் எதிரே குட்டை அமைந்துள்ளது. இதில் சிலர் இறைச்சி கழிவுகளை நள்ளிரவிலும், ஆள் நடமாட்டம் இல்லாத நேரங்களிலும் இந்த குட்டையில் தொடர்ந்து கொட்டி வந்தனர். பொதுமக்களின் புகாரை அடுத்து, காரமடை நகராட்சி கமிஷனர் கோபிநாத் தலைமையில், நகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கமிஷனரின் நேரடி மேற்பார்வையில், குட்டையில் தேங்கிக் கிடந்த இறைச்சி கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு தூய்மை செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை