உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம்

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம்

கோவை : முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை, கலெக்டர் கிராந்தி குமார் வழங்கினார்.கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், நடந்த விழாவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை, கலெக்டர் கிராந்தி குமார் வழங்கினார்.மாவட்ட அளவில் வெற்றி பெற்று முதலிடம் பெற்ற, 854 வீரர்களுக்கும், இரண்டாமிடம் பெற்ற, 854 வீரர்களுக்கும், மூன்றாமிடம் பெற்ற, 854 வீரர்களுக்கும், மண்டல அளவில் வெற்றி பெற்று முதலிடம் பெற்ற, 112 வீரர்களுக்கும், இரண்டாமிடம் பெற்ற, 112 வீரர்களுக்கும், மூன்றாமிடம் பெற்ற, 112 வீரர்களுக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.அவர்களின் வங்கிக்கணக்கில், முதலிடத்துக்கு ரூ.3000, இரண்டாமிடத்துக்கு ரூ.2000, மூன்றாமிடத்துக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது.நிகழ்ச்சியில், கலெக்டர் கிராந்தி குமார் பேசியதாவது:முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லுாரி, அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் என, 5 பிரிவுகளில் மாவட்ட அளவில், 52 வகையான போட்டிகளும், மண்டல அளவில், 12 வகையான போட்டிகளும் என மொத்தம், 64 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.கோவை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், 1449 பேர், கல்லுாரி மாணவர்கள், 16,809 பேர், பள்ளி மாணவர்கள், 18,679 பேர், பொதுப்பிரிவு 2167 பேர், மாற்றுத்திறனாளிகள் ஆண்கள், 654 பேர், என மொத்தம், 39,738 பேர் இணைய தளத்தில் பதிவு செய்துள்ளனர். 25 ஆயிரம் பேர், மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்கள்.மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ள வீரர்கள், அடுத்ததாக மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில், வெற்றி பெற்று அதிக பதக்கம் பெற்ற மாவட்டம் பெருமை பெற வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றி செல்வன், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி தாளாளர் சரஸ்வதி, விளையாட்டுத்துறை மண்டல இணை இயக்குனர் அருணா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆனந்த் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ