68 இடங்களில் மருத்துவ முகாம்
கோவை : கோவையில் காலநிலை மாற்றத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளி, இருமல் என அவதி அடைந்து வருகின்றனர்.நேற்று மாநகராட்சி சார்பில் கவுண்டம்பாளையம், கணபதி, குணியமுத்துார், பீளமேடு, போத்தனுார், துடியலுார், சிங்காநல்லுார் உட்பட, 32 இடங்களிலும், மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் புறநகர் பகுதியில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்துார், பெரியநாயக்கன்பாளையம் உட்பட, 36 இடங்கள் என, 68 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு இருந்தது.சுகாதாரத்துறை மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி கூறுகையில், ''மருத்துவ முகாம்களில் பெரிய அளவில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படவில்லை. வரும் காலங்களில் மழை அதிகரித்தால், காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க மக்கள் விழிப்புடன் இருக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.