மேலும் செய்திகள்
தொழில்நுட்ப கல்விக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
17-Jul-2025
கோவை; கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மற்றும் அமெரிக்கா கிளவுட் டெஸ்டினேசன் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக, கிளவுட் டெஸ்டினேசன் நிறுவனத்தில் வேலை, பயிற்சி வாய்ப்புகள், தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிகள், சான்றிதழ் பயிற்சிகள், பேராசிரியர்களுக்கு பயிற்சிகள், பாடத்திட்ட மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டதாக உள்ளது. இந்நிகழ்வில், கே.ஐ. டி., தலைவர் இந்து முருகேசன், கிளவுட் டெஸ்டினேசன் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சிவதர்மராஜ் புரிந்துணர்வு ஒப்பந்த கோப்புகளை கையெழுத்திட்டு மாற்றிக்கொண்டனர், முதல்வர் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
17-Jul-2025