உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாறு வடிதல் நோயை கட்டுப்படுத்தும் முறைகள்

சாறு வடிதல் நோயை கட்டுப்படுத்தும் முறைகள்

சூலுார், ஏப். 29- -தென்னையில் சாறு வடிதல் நோயை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து, வேளாண் பல்கலை மாணவிகள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள், கிராமப்புற விவசாய அனுபவ திட்டத்தின் கீழ், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கிராமங்களில் தங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, குமாரபாளையம் கிராமத்தில், தென்னையில் சாறு வடிதல் நோயை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து, விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.மாணவிகள் கூறியதாவது: மரத்தின் நீள்வெட்டு வெடிப்பு மற்றும் காயங்களில் இருந்து கருஞ்சிவப்பு நிற சாறு வடியும். அது காய்ந்து கருப்பாக மாறும். திசுக்கள் அழுகி, நோய் முற்றி, மரத்தின் உட்பகுதியில் குழாய் போன்று இடைவெளி ஏற்படும்.ஒருங்கிணைந்த மேலாண்மை மூலம் இதை கட்டுப்படுத்தலாம். மரம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு, 50 கி.கி., தொழு உரத்துடன், 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 200 கிராம் டிரைகோடெர்மா விரிடி கலந்து குழிகளில் இடவேண்டும்.தண்டு ரத்த போக்கை குறைக்க, செப்பு சல்பேட் மற்றும் சுண்ணாம்பை தண்ணீரில் கலந்து தயாரித்த போர்டோ கலவையை பாதிக்கப்பட்ட பகுதிகள், சுற்றியுள்ள திசுக்களில் பேஸ்டாக பூசவேண்டும் அல்லது தெளிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை