உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பால் வியாபாரிகள் உரிமம் வாங்கணும்; உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தல்

பால் வியாபாரிகள் உரிமம் வாங்கணும்; உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தல்

கோவை; வீடு வீடாகச் சென்று பால் வினியோகிப் போரும், தேசிய உணவு நிர்ணயம் மற்றும் பாதுகாப்பு அமைப்பின் பதிவு சான்றிதழ் மற்றும் உரிமம் பெற்றிருக்க வேண்டும்' என, உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தி யுள்ளது. வீடுகளுக்கு நேரில் சென்று பால் வினியோகிப்பவர்கள், பெரும்பாலும் தேசிய உணவு தர நிர்ணயம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,) பதிவு மற்றும் உரிமம் வைத்திருப்பதில்லை. அவர்களும் உரிமம் பெற வேண்டியது அவசியம். இதுதொடர்பாக, வழிகாட்டுதல் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதாவிடம் கேட்டபோது, ''பால் வியாபாரத்தில் ஈடுபடும் அனைவரும், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். 500 லிட்டருக்கு குறைவாக விற்பனை செய்பவர்கள் எப்.எஸ்.எஸ். ஏ.ஐ., பதிவும், அதற்கு மேல் விற்பனை செய்பவர்கள் உரிமமும், கட்டாயம் வைத்திருக்க வேண்டும். ஆவின் நிர்வாகத்திடம் இதுகுறித்து பேசியுள்ளோம். தவிர, வீடுகளுக்கு பால் நேரடியாக வினியோகிக்கும் வியாபாரிகளுக்கும் வழிகாட்டுதல் கூட்டம் நடத்த உள்ளோம், '' என்றார்.

விடுதிகளில் ஆய்வு

கோவை மாவட்டத்தில் செயல்படும் தனியார் விடுதிகள் கட்டாயம் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு வைத்திருக்க வேண்டும், உணவு தயாரிக்கும் இடங்கள், கொள்முதல், கழிவு மேலாண்மை, பூச்சி மேலாண்மை என அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்கள், தனியார் விடுதிகளின் உணவகங்கள், கேன்டீன் போன்றவற்றில், ஆய்வு துவக்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை