உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000.. ஹெச்.எம்.எஸ்., சங்கம்  கோரிக்கை

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000.. ஹெச்.எம்.எஸ்., சங்கம்  கோரிக்கை

கோவை; கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளர் சங்க, பொதுக்குழு கூட்டம், தலைவர் ராஜாமணி தலைமையில் நடந்தது.கூட்டத்தில், 'என்.டி.சி., ஆலைகளில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் உட்பட, அனைவருக்கும் கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. மதுரை மண்டல தொழிலாளர் கமிஷனர் அறிவுரைப்படி, என்.டி.சி., நிர்வாகம் தொழிலாளர்களுக்குரிய நிலுவை சம்பளம், 5 ஆண்டு கால போனஸ் மற்றும் இதர பயன்கள் வழங்க வேண்டும்.1995ம் ஆண்டின், தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தில் மாறுதல் செய்து, குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9,000 வழங்க, பிரதமர் மற்றும் மத்திய தொழிலாளர் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், சங்க பொருளாளர் மனோகரன் உட்பட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை