மேலும் செய்திகள்
விடுதியில் அமைச்சர் ஆய்வு
21-Nov-2024
வால்பாறை:கோவை மாவட்டம், வால்பாறையில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி நடந்த விழாவில், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பின், வால்பாறை நகரில் உள்ள அரசு கல்லுாரி மாணவியர் விடுதியை அமைச்சர் ஆய்வு செய்த போது, மாணவியர் விடுதியில் உணவு சரியில்லை. போதிய அளவு தண்ணீர் வருவதில்லை. அடிப்படை வசதிகள் இல்லை என அடுக்கடுக்காக புகார் தெரிவித்தனர்.இதனால், டென்ஷன் ஆன அமைச்சர், விடுதி வார்டன் ஜான்சிராணியிடம், மாணவியர் புகார் குறித்து விளக்கம் கேட்டார். எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் விடுதியை நிர்வகித்து, உணவு வழங்க வேண்டும் என, அறிவுறுத்தினார். புகார்கள் தொடர்ந்தால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தார்.
21-Nov-2024