மொபைல்போன்கள் திருட்டு: ஒருவர் சிறையிலடைப்பு
கோவை: கணபதி, மணிக்கவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் சிவசண்முகம், 20. அதே பகுதியில் பால்பண்ணை நடத்தி வருகிறார். பால்பண்ணையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். சிவசண்முகத்துடன் அவரது நண்பர் வேலுச்சாமியும் தங்கியுள்ளார். நேற்று அதிகாலை, திடீரென அறையில் சத்தம் எழுந்தது. சிவசண்முகம் எழுந்து பார்த்த போது, அங்கிருந்து மர்மநபர் ஒருவர் ஓடுவது தெரிந்தது. சிவசண்முகம், வேலுச்சாமி ஆகிய இருவரும் அந்நபரை துரத்தினர். அந்நபர், தான் வந்த பைக்கை விட்டு தப்பினார். அறையில் வந்து பார்த்த போது, சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த இரு மொபைல்போன்கள் மாயமாகியிருந்தது. பைக்கை தேடி மர்மநபர் மீண்டும் அங்கு வந்தார். அப்போது அவரது சட்டை பாக்கெட்டில் இரு மொபைல்போன்கள் இருந் தன. அந்நபரை பிடித்து சரவணம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில், அவர் கோவை மணியகாரன்பாளையத்தை சேர்ந்த சூர்யபிரகாஷ், 21 எனத் தெரிந்தது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.