அழைப்பிதழ் வடிவில் பைல் தொட்டால் மாயமாகும் பணம்
- நமது நிருபர் -புதிய வடிவிலான மோசடி வழிமுறை சைபர் குற்றவாளிகளால் சில மாதங்களாக பின்பற்றப்படுகிறது. வங்கிகளின் பெயரில் ஏ.பி.கே., எனப்படும் அப்ளிகேஷன் பைலை 'வாட்ஸ்ஆப்' செயலி வாயிலாக அனுப்பி, அதன் வாயிலாக வங்கி கணக்கிலிருந்து பணம் சுருட்டும் மோசடி நடக்கிறது. வங்கியிலிருந்து அனுப்பியது போல் அதன் பெயர், இலச்சினை, உயர் அதிகாரி போல் கையொப்பம் உடன் வரும் இந்த தகவலை நம்பி, அதில் வரும் இணைப்பை தொட்டால் உடனடியாக அந்த அப்ளிகேசன் வாடிக்கையாளர் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கிலிருந்து எளிதாக பணத்தை சுருட்டி விடுகிறது. இது தொடர்பாக, சைபர் குற்றவாளிகளிடமிருந்து பாதுகாப்பாக கவனமாக இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.