| ADDED : ஜன 19, 2024 04:25 AM
கோவை : சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துடன், தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு பிரத்யேகமாக, மான்டிசரி முறையிலும் பாடம் சொல்லித்தரப்படுகிறது.பள்ளி முதல்வர் கருணாம்பிகேஷ்வரி கூறியதாவது:கல்விப்பயணத்தில், 16 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். முன்மழலையர் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ளது. கல்வி மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாணவருக்குள்ளிருக்கும் தனித்திறனை அடையாளம் கண்டு ஊக்குவித்து வருகிறோம்.சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்றினாலும், முன்மழலையர் முதல் தொடக்க வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 'ப்ளூஜெம்ஸ்' மான்டிசரி என்ற பெயரில், பிரத்யேகமாக வகுப்புகள் கையாளப்படுகின்றன. தற்போது, ஆறு முதல் ஒன்பது வயது வரையிலான மாணவர்களுக்கு, 'லோயர்' மான்டிசரி வகுப்புகள் நடக்கின்றன.அடுத்தடுத்த ஆண்டுகளில், ஒன்பது முதல் 12 வயது வரையிலானோருக்கு, 'அப்பர்' மான்டிசரி வகுப்புகள் துவங்கப்படும். அடுத்த கல்வியாண்டுக்கான சேர்க்கை குறித்த கூடுதல் விபரங்களுக்கு, 99523 34343 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.