உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கவுன்சிலர்கள் எதிர்ப்பால் நகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு

கவுன்சிலர்கள் எதிர்ப்பால் நகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு

வால்பாறை : வால்பாறையில் கவுன்சிலர்கள் எதிர்ப்பால், நகராட்சி கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.வால்பாறை நகராட்சி கூட்டம் தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையில் நடந்தது. கமிஷனர் ரகுராமன், பொறியாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்றார்.கூட்டம் துவங்கியதும், மன்ற பொருளை நகராட்சி ஊழியர் வாசிக்க துவங்கினார். தி.மு.க., கவுன்சிலர்கள் ரவிசந்திரன், பால்சாமி, அன்பரசு, அ.தி.மு.க., கவுன்சிலர் மணிகண்டன், வி.சி., கவுன்சிலர் வீரமணி ஆகியோர் எழுந்து பேசினர்.அப்போது, கவுன்சிலர்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக வழங்க வேண்டிய மன்ற பொருள் (அஜண்டா) ஒரு நாளைக்கு முன்னதாக வழங்கினால் எப்படி படித்து பார்க்க முடியும். எனவே கூட்டத்தை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என, தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஐந்து நிமிட வாக்குவாதத்திற்கு பின், மன்றக்கூட்டம் வரும், 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக, தலைவர் அறிவித்தார். இதனை தொடர்ந்து கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர்.

தாமதமாக வந்தனர்

வால்பாறை நகராட்சி கூட்டம் காலை, 11:00 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், காலை, 11:30 மணிக்கு தான் கூட்டம் துவங்கியது. கவுன்சிலர்கள் எதிர்ப்பால், 11:45 மணிக்கு கூட்டம் முடிவடைந்தது.கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறி தலைவர் மற்றும் அதிகாரிகள் கலைந்து சென்ற பின், தி.மு.க., கவுன்சிலர்கள் மாரியம்மாள், மகுடீஸ்வரன், காமாட்சி, கவிதா ஆகியோர், 11:50 மணிக்கு தாமதமாக வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !