உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீடுதோறும் மரம் வளர்க்க வலியுறுத்தும் பேரூராட்சி

வீடுதோறும் மரம் வளர்க்க வலியுறுத்தும் பேரூராட்சி

கிணத்துக்கடவு,: கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் வீடுதோறும் மரக்கன்று நடவு செய்ய வேண்டும், என, பேரூராட்சி நிர்வாகத்தினர் வலியுறுத்துகின்றனர்.பருவ மழையை பயன்படுத்தி, கிணத்துக்கடவு பேரூராட்சி உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வீடுதோறும் மரம் வளர்க்க வேண்டும் எனவும், குடியிருப்பு பகுதியில் சிறிய அளவு இடம் உள்ளவர்கள் பழ வகை மரங்களையும், அதிக இடம் உள்ளவர்கள் பழ வகை மற்றும் நிழல் தரும் மரங்களையும் நடவு செய்ய வேண்டும்.மேலும், மரம் நடவு செய்ய இடவசதி இல்லாதவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பேரூராட்சி நிர்வாகத்தின் அனுமதியுடன் பொது இடத்தில் மரக்கன்றுகளை நடவு செய்யலாம்.பருவமழை துவங்க இருப்பதால் இந்த சமயத்தில் மரக்கன்றுகள் நடவு செய்தால், நன்கு வளர வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் மரக்கன்றுகள் வளர்க்க வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளை மரம் வளர்க்கும் செயலில் ஈடுபடுத்த வேண்டும், என, பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி