உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீதி தழைக்க முருகன் துணை நிற்பார்

நீதி தழைக்க முருகன் துணை நிற்பார்

போத்தனூர்; கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் நேற்று காலை, ஈச்சனாரி கோவில் முன் பழநி யாத்திரையை துவக்கினார். முன்னதாக எம்.எல்.ஏ.,சரஸ்வதி, மாநில செயற்குழு உறுப்பினர் பாலாஜி உத்தமராமசாமி, மாநகர் மாவட்ட மகளிரணி தலைவர் ஜெயஸ்ரீ, சுந்தராபுரம் மண்டல் தலைவர் முகுந்தன் மற்றும், 60 பெண்கள் உள்பட, நூறு பேர் பங்கேற்ற சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து வானதி சீனிவாசன் மற்றும் 45 பெண்கள் உள்பட, 80 பேர் 25 கார்களில் பழநிக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், ''இன்று, தமிழக அரசு எப்படி உள்ளது என மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இங்கு நீதி தழைக்க வேண்டும் எனில், தமிழ்நாட்டில் ஆன்மிக சக்தியுடன் ஒரு ஆட்சி மலர வேண்டும். அதற்கு, முருகன் துணை நிற்பார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி