உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சிங்கராம்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த 15ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது. வரும், 21ம் தேதி, மதியம் 2:00 மணிக்கு, கம்பம் வெட்டி கிணற்றில் விடுதல் நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு, கம்பதுக்கு பூஜை செய்து கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்வு நடக்கிறது. இரவு 10:00 மணிக்கு, கம்பம் நடுதல் மற்றும் பூவளர்க்கப்படுகிறது.வரும், 22ம் தேதி, இரவு 8:00 மணிக்கு, அன்னதானமும், அதன்பின் வேண்டுதல் பூவோடு எடுத்தல் மற்றும் அம்மன் அழைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 23ம் தேதி, காலை 5:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மாவிளக்கு எடுத்து பொங்கல் வைக்கப்படுகிறது. அன்று, இரவு 8:00 மணிக்கு, கம்பம் மற்றும் பூவோடு கிணற்றில் விடப்படுகிறது.வரும், 24ம் தேதி, மதியம் மஞ்சள் நீராடுதல் மற்றும் அம்மன் ஊர்வலம் நடக்கிறது. 25ம் தேதி, காலை சுவாமிக்கு மகா அபிஷேகம் மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை