உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாககாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

நாககாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

போத்தனூர்; கோவை, சுந்தராபுரம் அருகே செங்கோட்டையா காலனியில், நாககாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று அதிகாலை சக்தி விநாயகர் வழிபாடு, நான்காம் கால யாக வேள்வி, மகா பூர்ணாஹுதி, யாக சாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடும் நடந்தன. காலை 8:45 மணிக்கு நாககாளியம்மன் மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகள், கோபுர விமானங்களுக்கும், மகா கும்பாபிஷேகத்தை, பொள்ளாச்சி, பங்கமுத்தூர் மல்லீஸ்வரி சமேத மல்லீஸ்வரர் கோவிலின் நவநீதன் ஈசான சிவம் அய்யர் நடத்தி வைத்தார். மகா அபிஷேகம், தசதரிசனம், அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் ஆகியவை நடந்தன. திரளானோர் அம்மன், பரிவார மூர்த்திகளை தரிசித்து சென்றனர். இன்று முதல், 12 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை