உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறுகலான முடீஸ் பஸ் ஸ்டாண்ட்; இடநெருக்கடியில் தவிக்கும் பயணியர் 

குறுகலான முடீஸ் பஸ் ஸ்டாண்ட்; இடநெருக்கடியில் தவிக்கும் பயணியர் 

வால்பாறை; வால்பாறையிலிருந்து, 7 கி.மீ., தொலைவில் உள்ள முடீஸ் பஜாரை சுற்றிலும், கெஜமுடி, முத்துமுடி, நல்லமுடி, தோணிமுடி, ஆனைமுடி, வாகமலை, ைஹபாரஸ்ட், சங்கிலிரோடு, பன்னிமேடு உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட்கள் உள்ளன. இந்த எஸ்டேட்களில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பிலும், பொள்ளாச்சி கோட்டத்தின் சார்பிலும், நாள் தோறும், 20க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒரே ஒரு பஸ் மட்டுமே வந்து செல்லும் அளவில் பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளதால், பயணியர் நாள் தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் கூறுகையில், 'முடீஸ் பஜார் பகுதியில் அமைந்துள்ள குறுகலான பஸ் ஸ்டாண்டாலும், நிழற்கூரை இல்லாததாலும், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்கள் திறந்தவெளியில் மழையிலும், வெயிலில் பல மணி நேரம் காத்திருந்து பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. நகராட்சி சார்பில் இந்தப் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் கட்ட வேண்டும்' என்றனர். நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'அங்குள்ள பஸ் ஸ்டாண்டை நேரில் ஆய்வு செய்துள்ளோம். விரைவில் பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விரிவுபடுத்தப்பட்ட பின் தேவையான அடிப்படை வசதிகள் செய்துதரப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ