/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் நடந்த குரலியல் தேசிய கருத்தரங்கு
கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் நடந்த குரலியல் தேசிய கருத்தரங்கு
கோவை: கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் நிகழ்த்துக்கலை துறை சார்பில், குரலியல் தேசிய கருத்தரங்கு நடந்தது. கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் வசந்தகுமார் தலைமை வகித்தார். அவர், நிகழ்த்துக்கலை துறை டீன் ஜனகமாயாதேவியால் தொகுக்கப்பட்ட, குரலியல் ஆய்வுக்கோவையினை வெளியிட்டார். கேரளாவின் திருச்சூரிலுள்ள சேதனா தேசிய குரலியல் மையத்தின் நிறுவனர் பால் பூவாதிங்கள் ஆய்வுரையாளராகக் கலந்துகொண்டார். குரலின் தன்மை, குரல் அறிவியல், குரல் பயிற்சி மற்றும் குரல் சிகிச்சை ஆகிய நிலைகளை ஆய்வாளர்களுக்கு எடுத்துரைத்தார். கருத்தரங்கில் நாடு முழுவதிலிருந்தும் 450 ஆய்வாளர்களும், பேராசிரியர்களும் ஆய்வுக்கட்டுரைகளை விவாதித்தனர். பதிவாளர் பிரதீப், நிகழ்த்துக்கலைப் புல முதன்மையர் ஜனகமாயாதேவி, இசைத்துறையின் உதவி பேராசிரியர் ஸ்ருதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.