உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய கைப்பந்து போட்டி;  அரசு பள்ளி மாணவி வெற்றி

தேசிய கைப்பந்து போட்டி;  அரசு பள்ளி மாணவி வெற்றி

கோவை:தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில், தமிழக அணிக்காக சின்னத்தடாகம் அரசு பள்ளி மாணவி விளையாடி அசத்தினார்.இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில், தேசிய அளவிலான கைப்பந்து போட்டி, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்தது.தமிழக அணிக்காக விளையாடிய, சின்னத்தடாகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அனுஸ்ரீ, சிறப்பாக விளையாடி அணியின் ஒவ்வொரு வெற்றிக்கும் பங்களித்தார்.தமிழக அணி தேசிய போட்டியில் வெண்கலப்பதக்கம் வெல்ல, தன் முழு பங்களிப்பையும் அளித்துள்ளார்.தமிழக அணி சார்பில், தேசிய போட்டியில் பங்கேற்று வெண்கலம் வென்ற பள்ளி மாணவியை தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள் என பலர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ