உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நம்மாழ்வாரை நினைவுகூர்ந்த இயற்கை வேளாண் கருத்தரங்கு

நம்மாழ்வாரை நினைவுகூர்ந்த இயற்கை வேளாண் கருத்தரங்கு

கோவை;கோவை குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியில், 'ரீஜெனரேட் 2024' எனும் இயற்கை வேளாண்மை கருத்தரங்கு, நேற்று நடந்தது. இயற்கை வேளாண்மையில் உடலுக்கு நலம் தரும் காய்கறி உற்பத்திகள், பழங்கள், இயற்கையாக விளைவிக்கப்படும் பொருட்கள், கண்காட்சியில் விளக்கப்பட்டன. நம்மாழ்வார் இயற்கை வேளாண்மையை பயன்படுத்தி, கோபியை சேர்ந்த அம்மாசையப்பன் பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தார். இயற்கை விவசாயம் பற்றி அவர் கூறுகையில், ரசாயன பொருட்களால் தீமைகள் ஏற்படுகின்றன. நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உரம், பூச்சி கொல்லி மருந்துகள் மனித வாழ்க்கையை பாதிக்கின்றன. இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிப்பதால், சுவையும், மணமும் மட்டுமின்றி, காய்கறியின் குணமும் மாறுவதில்லை, என்றார். கண்காட்சியில், இயற்கை விவசாயத்தில் விளைந்த பூக்கள், காய்கறி, வாழை பொருட்களின் மதிப்புமிக்க பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை