உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நவராத்திரி தள்ளுபடியில் பர்னிச்சர் கண்காட்சி

நவராத்திரி தள்ளுபடியில் பர்னிச்சர் கண்காட்சி

கோவை: கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில், பர்னிச்சர் மற்றும் லைப்ஸ்டைல் கண்காட்சி நேற்று துவங்கியது. வரும் 30ம் தேதி நிறைவு பெறுகிறது.வெளிநாட்டு, உள்நாட்டு வகைகளில் தேக்கு, கண்ணாடி, அக்ரிலிக், பைபர், மாடுலர், டைனிங், கார்டனிங், என அனைத்து வகை பர்னிச்சரையும் ஒரே இடத்தில் வாங்கலாம். 15க்கும் மேற்பட்ட முன்னணி பிராண்டுகளின், 900க்கும் மேற்பட்ட மாடல்களில் பர்னிச்சரும், தொழிற்சாலையிலிருந்து நேரடியாக வரவழைக்கப்படடு, விற்பனை செய்யப்படுகிறது.120 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நவராத்திரி ஆபரில் பர்னிச்சருக்கு, 70 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. வீட்டு தேவைகளுக்கு மட்டுமின்றி, அலுவலக பர்னிச்சரும் தள்ளுபடி விலையில் வாங்கலாம். பழைய பர்னிச்சரை கொடுத்து, மாற்றிக்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.இதில், முன்பணம் இன்றி இ.எம்.ஐ., வசதியில் பர்னிச்சரை வாங்கிச்செல்லலாம். காலை, 10:30 முதல் இரவு, 8:30 மணி வரை, பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை