நேரு கலை அறிவியல் கல்லுாரி 24ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
கோவை; கோவை நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின், 24வது பட்டமளிப்பு விழா நிகழ்வு, கல்லுாரி அரங்கில் நடந்தது. நேரு கல்விக்குழும செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமைவகித்து நிகழ்வுகளை துவக்கிவைத்தார். காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் கர்னல் ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். நிகழ்வில், நேரு கல்விக் குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணதாஸ் கானொலி காட்சி வாயிலாக பங்கேற்று பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். பட்டமளிப்பு விழாவில், 2021-2024 ம் கல்வியாண்டில் இளங்கலை, முதுகலை பாடப்பிரிவில் படித்த 815 பேர் பட்டங்களை பெற்றனர். அனைத்து பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற, 59 பேருக்கு பாராட்டு சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டன.