உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய கண்டுபிடிப்புகள்; கல்லுாரியில்  போட்டி 

புதிய கண்டுபிடிப்புகள்; கல்லுாரியில்  போட்டி 

பொள்ளாச்சி;பொள்ளாச்சி சக்தி தகவல் மேலாண்மையியல் கல்லுாரி, இன்ஸ்டிடியூட் ஆப் இன்னவேஷன் கவுன்சில் சார்பில், பிரகலாத் அரங்கில், கல்லுாரிகளுக்கு இடையேயான மாணவர்களுக்கான புதுமையான கண்டுபிடிப்புகள் குறித்த போட்டி நடந்தது.மற்ற கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் குழுவுக்கு, இரண்டு பேர் வீதம், 20 குழுக்கள் பங்கேற்றன. இதில், பட விளக்கக்காட்சி வாயிலாக புதுமையான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை காட்சிப்படுத்தினர்.புதுமையான கருத்துக்களுக்கான 'ஸ்மார்ட்' மறு சுழற்சி தொட்டி, பிளாஸ்டிக் மறு சுழற்சி, சுற்றுப்புறச்சூழல் குறித்தும், கருவுறாமைக்கான காரணங்கள் குறித்தும் விளக்கினர். இறுதியாக மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.ஒருங்கிணைப்பாளர்கள், பேராசிரியர்கள் பாலாஜி விக்னேஷ், சிவஞான செல்வக்குமார் மற்றும் பேராசிரியர்கள் இதற்கான ஏற்பாட்டினை செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி