உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டாஸ்மாக் நிறுவனத்துக்கு புது அதிகாரிகள் நியமனம்

டாஸ்மாக் நிறுவனத்துக்கு புது அதிகாரிகள் நியமனம்

கோவை: கோவை 'டாஸ்மாக்' நிறுவனத்துக்கு, புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்க இருப்பதால், அரசு துறை அலுவலகங்களில் ஒரே ஊரில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் அதிகாரிகள், வெவ்வேறு நகரங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இதன்படி, கோவையில் பணிபுரிந்த தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (டாஸ்மாக்) அதிகாரிகள் சமீபத்தில், இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக, புதிய அதிகாரிகள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.சேலத்தில் கோட்டாட்சியராக பணிபுரிந்த தணிகாசலம், கோவை தெற்கு மாவட்ட 'டாஸ்மாக்' மேலாளராகவும், ஈரோடு மாவட்டத்தில் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் பணிபுரிந்த வாணிலட்சுமி ஜெகதாம்பாள், வடக்கு மாவட்ட 'டாஸ்மாக்' மேலாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி