/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இ---பாஸ் சோதனை சாவடிக்கு புதிய மேற்கூரை; தினமலர் செய்தி எதிரொலி
இ---பாஸ் சோதனை சாவடிக்கு புதிய மேற்கூரை; தினமலர் செய்தி எதிரொலி
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு தூரிப்பாலத்தில் இ--பாஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நீலகிரி மாவட்டம் செல்லும் வாகனங்கள் பூம் பேரியர் வாயிலாக இ-பாஸ் பெற்றுள்ளனரா என தானியங்கி முறையில் சோதனை செய்யப்பட்டு, பின் அனுமதிக்கப்படுகிறது.இந்த சூழ்நிலையில் வாகனங்கள், சுற்றுலா பயணிகள், இ-பாஸ் சோதனை அதிகாரிகள், போலீசார் என அனைவரும் இ- பாஸூக்காக அமைக்கப்பட்டிருந்த ஓலை மேற்கூரைக்கு கீழே நின்று தான் தங்களது பணிகளை செய்து வந்தனர். அது மிகவும் சேதமடைந்து கீழே விழும் நிலையில் இருந்தது. இதுகுறித்து, அண்மையில் தினமலர் நாளிதழில் செய்தி வெளி வந்தது.இதையடுத்து, தற்போது இ--பாஸ் ஓலை மேற்கூரைகள் முற்றிலும் அப்புறப்படுத்தப்பட்டு, புதிதாக தகர ஷீட் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள், ஊழியர்கள், போலீசார் நிம்மதியடைந்துள்ளனர்.---