| ADDED : பிப் 14, 2024 01:51 AM
கோவை;தமிழ்நாடு வேளாண் பல்கலையில், வேளாண் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், இயந்திரங்கள், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். பல்கலையில், உணவு பதன் செய்தல், ஆற்றல், பண்ணை இயந்திரத்துறை, உயிர் சக்தி உபகரணங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட உபகரணங்களை காட்சிப்படுத்தி, செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.இதில், பருப்பு உடைக்கும் இயந்திரம், காய்கறி நடவு செய்யும் இயந்திரம், ஆற்றல் சேமிப்பு இயந்திரம் என பல இயந்திரங்களின் செயல் விளக்கங்களை, முதுநிலை மாணவர்கள் விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தினர்.பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். துவக்கவிழாவில், துணைவேந்தர் கீதாலட்சுமி, வேளாண் துறையில் விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினார். இதில், உணவு பதன்செய் துறை தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.