உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / என்.எம்.எம்.எஸ்., 208 பேர் தேர்ச்சி

என்.எம்.எம்.எஸ்., 208 பேர் தேர்ச்சி

கோவை:அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை திட்ட(என்.எம்.எம்.எஸ்.,) தேர்வு கடந்த பிப்., 3ம் தேதி நடந்தது. இதில், கோவை மாவட்டத்தில், 208 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு, 139 பேர் தேர்ச்சி பெற்றனர். தற்போது தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, 9, 10, 11, 12ம் வகுப்புகளில் தலா, 12 ஆயிரம் ரூபாய் வீதம், 48 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. வரும் கல்வி ஆண்டுக்கான தேர்வுக்கான பயிற்சி வகுப்பு, வரும் 15ம் தேதி துவங்கப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ