எந்த வசதியும் இல்லை; ஆர்.டி.ஓ.,விடம் மக்கள் புகார்
அன்னுார்; கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் ஒட்டர்பாளையம் ஊராட்சியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆய்வு செய்தார். அல்லிக்காரம்பாளையம், ஒட்டர்பாளையம், பூலுவபாளையம், ஜீவா நகர் பகுதியில், அங்கன்வாடி மையம், ரேஷன் கடைகள், துணை சுகாதார நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.ஊராட்சி மன்ற அலுவலகத்தில், அல்லிக்காரம்பாளையம், அழகாபுரி நகர், ஜீவா நகர் மக்கள் கூறுகையில், 'எங்கள் பகுதியில், 10 நாட்களுக்கு, ஒருமுறை தான் குடிநீர் வருகிறது. பல வீதிகளில் கழிவுநீர் வடிகால் வசதியில்லை.கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது, ' என சரமாரியாக புகார் தெரிவித்தனர்.