சொற்பத்தொகை வேண்டாம்; சட்டப்படி போனஸ் வேண்டும்
கோவை; தமிழ்நாடு துாய்மை காவலர் பொது தொழிலாளர் சங்கத்தின், மாநில பொது செயலாளர் ஜோதி, மாநகராட்சி துணை கமிஷனர் குமரேசனிடம் நேற்று அளித்த மனுவில், 'மாநகராட்சியில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களான துப்புரவு, கொசு ஒழிப்பு பணியாளர், குடிநீர் வினியோக பணியாளர், டிரைவர், கிளீனர் ஆகியோருக்கு, இதுவரை சட்டப்படியான போனஸ் வழங்கப்படவில்லை. இனாமாக சொற்பத்தொகை வழங்கி வருவது சட்டத்துக்கு எதிரானது. இத்தொழிலாளர்களுக்கு, 2024-25ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸாக, இரு மாத சம்பளம் வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.