உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரண்டு மாதமாக சம்பளம் இல்லை; சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் தவிப்பு

இரண்டு மாதமாக சம்பளம் இல்லை; சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் தவிப்பு

கோவில்பாளையம்; சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு சம்பளம் வழங்காததால் தவிக்கின்றனர். தமிழகத்தில், 2001ம் ஆண்டு அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சுகாதார திட்டம் துவக்கப்பட்டது. பின், முழு சுகாதார திட்டம் என மாற்றப்பட்டது. இதில், 25 ஊராட்சிகளுக்கு உட்பட்ட ஒன்றியங்களில் தலா ஒரு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளரும், அதற்கு மேல் ஊராட்சிகள் உள்ள ஒன்றியங்களில் இரண்டு ஒருங்கிணைப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்பட்டு விடும். ஆனால், தற்போது ஜனவரி, பிப்ரவரி மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிலர் கூறுகையில், 'கடந்த டிசம்பர் மாதம் சம்பளம் வழங்கும் முறை ஊராட்சி ஒன்றியத்திலிருந்து கருவூல முறைக்கு மாற்றப்பட்டது.இதைத்தொடர்ந்து ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களுக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை.மார்ச் மாதத்திலும் 18 நாட்கள் ஆகிவிட்டன. இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளோம். அரசு விரைவில் எங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ