உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் தர்ணா போராட்டம்

 கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் தர்ணா போராட்டம்

கோவை: கோரிக்கைகளை வலியுறுத்தி, செவிலியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. கோவை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று மாலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதி, 356 ன் படி, எம்.ஆர்.பி., தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம் எனும், உயர் நீதிமன்ற தீர்ப்பின் மீதான மேல்முறையீடு ரத்து, தமிழக அரசு மருத்துவத் துறையில் ஒப்பந்தம், முறை, அத்தக்கூலி முறை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ராமலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தங்கமுனீஸ்வரி, மாவட்ட இணைச்செயலாளர் மார்த்தாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்