உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனையில், காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது.காசநோயை அடுத்த ஆண்டுக்குள், முற்றிலும் ஒழிப்பதற்காக, மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இதற்காக, தமிழகத்தில் நோயாளிகளை கண்டறிதல், தொடர் கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.இந்நிலையில், பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவனையில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டும் வருகிறது. இவர்களுக்கு, ஊட்டச்சத்து உதவித்தொகையாக, அரசால், 1,000 ரூபாய் வழங்கி வரும் நிலையில், தன்னார்வ அமைப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.அவ்வகையில், 'ஆல் தி சில்ரன்' அறக்கட்டளை சார்பில், மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது. ஊட்டச்சத்து மிக்க உணவு, காய்கறிகள், பழங்கள் சாப்பிடும் போது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோயின் தாக்குதலில் இருந்து மீள முடியும் என, தெரிவிக்கப்பட்டது.இருப்பிட மருத்துவ அலுவலர் மாரிமுத்து, காசநோய் தடுப்பு அலுவலர் பிரவீன்குமார், அறக்கட்டளை நிர்வாகி சம்பத்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை