மேலும் செய்திகள்
லாரிகள் பறிமுதல் ரூ.2 லட்சம் அபராதம்
09-Nov-2024
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, அதிக பாரம் ஏற்றி வந்த மூன்று டிப்பர் லாரிகளுக்கு, ஒரு லட்சத்து, 58 ஆயிரம் ரூபாய் அபராதம் விதத்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.பொள்ளாச்சி அருகே, கோமங்கலம்புதுார் போலீசார், அந்தியூர் வாகன சோதனைச்சாவடியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மூன்று டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர்.அதிக பாரம் ஏற்றி வந்ததை கண்டறிந்த போலீசார், டிரைவர்கள் திருச்சூர் கண்ணன்,40, கொமரலிங்கம் இருசா,49, சிவசாமி,50 ஆகியோரிடம் விசாரித்தனர்.விசாரணையில், உடுமலை கிருஷ்ணாபுரம் கல்குவாரியில் இருந்து கஞ்சம்பட்டிக்கும், நரசிங்காபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து வீரல்பட்டியில் உள்ள தனியார் மெட்டல் கிரஷருக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது.இதையடுத்து, மூன்று லாரிகளை பறிமுதல் செய்த கோமங்கலம் போலீசார், வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுல கிருஷ்ணன் ஆகியோர், ஆய்வு செய்தனர். அதன்பின், மூன்று லாரிகளுக்கு, ஒரு லட்சத்து, 58 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
09-Nov-2024