உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிளைச்சிறையில் அதிகாரிகள் ஆய்வு

கிளைச்சிறையில் அதிகாரிகள் ஆய்வு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி கிளைச்சிறையில் மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.கோவை மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா, மாவட்ட கலெக்டர், எஸ்.பி., கார்த்திக்கேயன் மற்றும் அதிகாரிகள் குழுவினர், பொள்ளாச்சி கிளைச்சிறையில் ஆய்வு செய்தனர். சிறை கண்காணிப்பாளர் மாரிமுத்து, அரசு சாரா பார்வையாளர் கமலக்கண்ணன், போலீசார் உடன் இருந்தனர்.அதிகாரிகள் கூறுகையில், 'நாடு முழுவதும் சிறைச்சாலைகளில் ஜாதி பாகுபாடு உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில், பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதன் அடிப்படையில், சிறைவாசிகளிடம் ஜாதி பாகுபாடு உள்ளதா, அடிப்படை தேவைகள் குறித்து ஆய்வு செய்ய கோர்ட் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் குழுவினர் ஆய்வு செய்தனர்.சிறைவாசிகளிடம், ஜாதிய பாகுபாடு உள்ளதா என்றும், உணவு மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தனர். கிளைச்சிறையில் நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது பயன் உள்ளதாக சிறைவாசிகள் தெரிவித்தனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ