உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பாம்பு கடித்து மூதாட்டி பலி

 பாம்பு கடித்து மூதாட்டி பலி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே, ஜடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாந்தாமணி, 67; விவசாயக் கூலி தொழிலாளி. இவர் தோட்டம் ஒன்றில் பூப்பறிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, அவரது காலில் விஷப்பாம்பு கடித்தது. உடன் வேலை செய்தவர்கள் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு துாக்கிச்சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, சிறுமுகை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை