மேலும் செய்திகள்
சேதமடைந்த மின்பெட்டிகளால் விபத்து அபாயம்!
31-Mar-2025
கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில் உள்ள, நடைபாதையில் நடக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.கிணத்துக்கடவு, சர்வீஸ் ரோட்டின் ஓரம் உள்ள நடைபாதையை மாணவர்கள், வியாபாரிகள் மற்றும் மக்கள் பயன்படுத்துகின்றனர். இதில், புது பஸ் ஸ்டாண்ட் அருகே, கழிவு நீர் கால்வாய் முழுமை பெறாமல் இருப்பதால், கழிவுநீர் அங்கேயே தேங்கி நிற்கிறது.இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் ஏற்படுவதுடன், பஸ் பயணியர்களுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த கால்வாயை பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கால்வாயுடன் இணைக்க, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதே போன்று, போலீஸ் ஸ்டேஷன் அருகே நடைபாதை ஓரத்தில் குறிச்சி --- குனியமுத்தூர் குடிநீர் குழாயில், கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து குடிநீர் வெளியேறாமல் இருக்க, குழாய் அருகே குழி தோண்டி அந்த மண்ணை நடைபாதையில் கொட்டியுள்ளனர்.இதனால் குடிநீர் அப்பகுதியில் தேங்கி நிற்பதுடன், நடைபாதையில் மக்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது. இதை உடனடியாக சரி செய்ய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
31-Mar-2025