உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண் வன்கொடுமை சட்டத்தில் ஒருவர் கைது

பெண் வன்கொடுமை சட்டத்தில் ஒருவர் கைது

போத்தனூர், ; கோவைபுதூரிலுள்ள எஸ்.எம்.கார்டனை சேர்ந்தவர் ஷர்மிலி, 39. இவர் தனது காரை ரெட் டாக்ஸி நிறுவனத்தில் இணைத்து வாடகைக்கு விட்டுள்ளார். இதனை கடந்த சில நாட்களாக அறிவொளி நகரை சேர்ந்த சமீர், 27 என்பவர் ஓட்டிவந்துள்ளார். அவரது மொபைல்போன் சேதமடைந்தது. சமீர், ஷர்மிலியிடம் தனக்கு மொபைல்போன் தேவை என கூறியுள்ளார். ஷர்மிலி தனது பழைய மொபைல்போனில் இருந்த அனைத்து பதிவுகளையும் அழித்துவிட்டு, சமீரிடம் கொடுத்துள்ளார். கடந்த 8ம் தேதி இரவு ஷர்மிலியை அழைத்த சமீர், அவரது புகைப்படம் அழகாக இருப்பதாக கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த ஷர்மிலி, மொபைல்போனை திருப்பி கேட்டுள்ளார். இரவு 11:00 மணியளவில் ஷர்மிலியின் வீட்டிற்கு வந்த சமீர், அவரிடம் அநாகரீகமான முறையில் பேசினார். ஷர்மிலி அருகில் வசிப்போரை அழைத்துள்ளார். அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைக்கண்ட சமீர், ஷர்மிலியை மிரட்டிவிட்டு தப்பினார். ஷர்மிலி புகாரில் குனியமுத்தூர் போலீசார் சமீரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி