உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆன்லைன் வர்த்தகம் ரூ.1.64 கோடி மோசடி

ஆன்லைன் வர்த்தகம் ரூ.1.64 கோடி மோசடி

கோவை:ஆன்லைன் வாயிலாக 1.64 கோடி ரூபாய் மோசடி குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கோவை, சாய்பாபா காலனியை சேர்ந்த, 56 வயது நபர் பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த மாதம், இவரது மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்ட, அனன்யா கபூர் என்ற பெண், குழு ஒன்றில் இணைத்திருப்பதாகவும், அக்குழுவில் பரிந்துரைக்கப்படும் பங்குகளை வாங்கினால், அதிக லாபம் பெறலாம் எனவும் தெரிவித்தார். 'லிங்க்' அனுப்பி, அதன் வாயிலாக முதலீடு செய்ய அறிவுறுத்தினார். உண்மை என நம்பிய கோவை நபர், பல்வேறு தவணைகளாக, 66 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். லாப பணத்தை எடுக்க முயற்சித்தபோது முடியவில்லை. அப்போது, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதே போல், கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த, 65 வயது முதியவரிடம், 59.71 லட்சம் ரூபாய் மற்றும் கோவை சிட்ராவை சேர்ந்த, 58, வயது பெண்ணிடம், 39.33 லட்சம் ரூபாய் என, மொத்தம், 1.64 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !