உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நடுநிலை பள்ளியில் மன்ற செயல்பாடுகள் துவக்க விழா

நடுநிலை பள்ளியில் மன்ற செயல்பாடுகள் துவக்க விழா

நெகமம்; நெகமம், மெட்டுவாவி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மன்ற செயல்பாடுகள் துவக்க விழா நடந்தது.மெட்டுவாவி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், மன்ற செயல்பாடுகளுக்கான துவக்க விழா நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் மயிலாத்தாள் தலைமை வகித்தார். அரசு பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் தனித்திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்த இவ்விழா நடந்தது.இதில், இலக்கியம், வினாடி -- வினா, சிறார் திரைப்படம், வானவில், சுற்றுச்சூழல், உடல் நல மன்றம், மகிழ் முற்றம் உள்ளிட்ட பல்வேறு மன்ற செயல்பாடுகளுக்கு, ஒவ்வொரு ஆசிரியரையும் பொறுப்பாளராக தலைமை ஆசிரியர் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து மாணவர்களின் அறிமுகம் நடந்தது. நிறைவாக, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து மன்ற செயல்பாட்டிற்கான உறுதிமொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ