உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளுக்காக 5 கவுன்டர் திறப்பு- நோயாளிகள், உறவினர்கள் மகிழ்ச்சி

கோவை அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளுக்காக 5 கவுன்டர் திறப்பு- நோயாளிகள், உறவினர்கள் மகிழ்ச்சி

கோவை : கோவை அரசு மருத்துவமனையில், புதிதாக ஏற்படுத்தப்பட்ட, 5 கவுன்டர்கள் திறக்கப்பட்டன.கோவை அரசு மருத்துவமனையில் கோவை மட்டுமின்றி நீலகிரி,திருப்பூர் மற்றும் கேரளாவில் இருந்து தினமும் நுாற்றுக்கணக்கானோர் உள்நோயாளிகளாகவும், வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு முன், மருத்துவமனையில் உள்ள வெளிநோயாளிகள் கவுன்டரில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன் பின், சம்மந்தப்பட்ட சிகிச்சை பிரிவுக்கு சென்று, டாக்டர்களிடம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.இந்நிலையில், வெளிநோயாளிகளின் விவரங்களை பதிவு செய்ய ஆண்களுக்கு ஒன்று, பெண்களுக்கு ஒன்று என, இரு கவுன்ட்டர்கள் மட்டுமே செயல்பட்டு வந்தது. இதனால் குழந்தைகளுடன் வருபவர்களும், முதியவர்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.நோயாளிகளின் சிரமத்தை குறைக்க, கூடுதல் கவுன்டர் திறக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து அரசு மருத்துவமனை டீன் அலுவலகம் செல்லும் நுழைவாயில் பகுதியில், 5 கவுன்டர்கள் ஏற்படுத்தப்பட்டன.இரண்டு மாதங்களுக்கு பின் தற்போது வெளிநோயாளிகளுக்கு, 5 கவுன்டர்களும், உள்நோயாளிகளுக்கு, 2 கவுன்டர்களும் திறக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் சிரமம் குறைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ