உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி ஊர்வலம்

ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி ஊர்வலம்

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றி ஊர்வலம் நடந்தது.பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் சக்தி கேந்திரம், அண்ணா நகர் சக்தி கேந்திரம், கவுண்டம்பாளையம் தெற்கு சக்தி கேந்திரம் சார்பில் நடந்த ஊர்வலத்துக்கு கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.,ஓ.பி.சி., அணி தலைவர் பாலு தலைமை வகித்தார். கூடலூர் நகர்மன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், பிரியதர்ஷினி, விஜய்குமார், பிரவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக வாராகி மணிகண்ட சுவாமிகள் கலந்து கொண்டு, வெற்றி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். வள்ளுவர் பூங்கா முன்பு துவங்கிய ஊர்வலம், வஞ்சிமா நகர், பாலாஜி நகர், பாலமலை ரோடு வழியாக சென்று மீண்டும் வள்ளுவர் பூங்காவை அடைந்தது.இந்த ஊர்வலத்தில் பெரியநாயக்கன்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சார்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள், பா.ஜ.,வினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கோவில்பாளையம்

ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வெற்றி யாத்திரை நேற்று கோவில்பாளையத்தில் நடந்தது. பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் யாத்திரையை துவக்கி வைத்து பேசினார். யாத்திரையில் ராணுவ வீரர்கள் மற்றும் பிரதமர் மோடியை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பா.ஜ., ஒன்றிய தலைவர் கார்த்தி, நிர்வாகி தண்டபாணி, அ.தி.மு.க., நிர்வாகிகள் சுகுமார், தேவராஜ், கவிதா சண்முகசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ