உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீர் வழித்தடங்களை துார்வார உத்தரவு

நீர் வழித்தடங்களை துார்வார உத்தரவு

கோவை: மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மழை நீரை விரைவாக வெளியேற்றும் வகையில், கூடுதல் மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சுண்டக்காமுத்துார் ரோடு சந்திப்பில், செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் பெரிய குளத்திற்கு செல்கிறது. தண்ணீர் கடந்து செல்லும் மழைநீர் வடிகால்களை மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். நீர் வழித்தடங்களில் பிளாஸ்டிக், குப்பை அடைப்பை துார்வாரவும் உத்தரவிட்டனர். துணை கமிஷனர் குமரேசன், உதவி கமிஷனர் நித்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ