ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
கோவை; கோவை, அவிநாசி ரோட்டிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுரேஷ்குமார். சென்னை அடையாறில் உள்ள தனியார் நிவா பூபா இன்சூரன்ஸ் நிறுவனத்தில், குடும்பத்தினருக்கான மருத்துவ காப்பீடு செய்தார். இந்த நிலையில் இவரது தாயாருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் மூளை பக்கவாதம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மூளை பக்கவாத சிகிச்சைக்கு 9.83 லட்சம் ரூபாய் செலவானது. மருத்துவ செலவு தொகை கேட்டு விண்ணப்பித்தும், இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கவில்லை. இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், இன்சூரன்ஸ் நிறுவனம் 10.25 லட்சம் ரூபாய் மருத்துவ செலவு தொகை வழங்க வேண்டும். மனஉளைச்சலுக்கு 10,000 ரூபாய், வழக்கு செலவாக, 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று தெரி வித்துள்ளனர்.