உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தடுப்பணை கட்டாமல் மோசடி விசாரிக்க அதிகாரிக்கு உத்தரவு

தடுப்பணை கட்டாமல் மோசடி விசாரிக்க அதிகாரிக்கு உத்தரவு

கோவை:கோவை மாவட்டம், ராமபட்டினம் ஊராட்சியில், ஏழு இடங்களில் தடுப்பணை கட்டாமல், நிதி முறைகேடு செய்திருப்பதாக எழுந்த புகாரின் படி, நமது நாளிதழில், செய்தி வெளியானது.உடனே, 2 லட்சம் ரூபாய், ஒன்றிய அலுவலக வங்கி கணக்கில் திருப்பிச் செலுத்தப்பட்டது. இந்நிலையில், பா.ஜ.,வை சேர்ந்த செந்தில்குமார், அதே ராமபட்டினம் ஊராட்சியில், இன்னொரு இடத்தில் தடுப்பணை கட்டாமல், நிதி கையாடல் செய்திருப்பதாக புகார் கொடுத்தார். தேசிய வேலை உறுதி திட்ட மாவட்ட குறைதீர்ப்பு அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆய்வு செய்து, நிதி கையாடல் செய்திருப்பது உறுதி என, கலெக்டர் கிராந்திகுமாருக்கு அறிக்கை சமர்ப்பித்தார். இதையடுத்து, ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் ஜெகநாதன், விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை