உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போனுக்கு பதிலாக கிரீம் இழப்பீடு வழங்க உத்தரவு

போனுக்கு பதிலாக கிரீம் இழப்பீடு வழங்க உத்தரவு

கோவை:மொபைல் போன் மாடலை மாற்றி அனுப்பியதால்,இழப்பீடு வழங்க அமேசான் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.சரவணம்பட்டி, சத்தி மெயின் ரோட்டை சேர்ந்த முத்துக்குமார் என்பவர், அமேசான் ஆன்லைன் போர்ட்டல் வாயிலாக, 2023, மே 1ல், 6,499 ரூபாய் மதிப்புள்ள 'ரெட்மி 9ஏ ஸ்போர்ட்ஸ்'மாடல் மொபைல் போன்முன்பதிவு செய்தார். முத்துக்குமாருக்கு வந்த பார்சலை பிரித்து பார்த்த போது, முன்பதிவு செய்த மாடலுக்கு பதிலாக, பழைய பட்டன் மொபைல் போன் மற்றும் ஸ்கின் கிரீம் வந்தது. பொருளை மாற்றித் தருமாறு, அமேசான் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினார். ஆனால், ஆர்டர் செய்த சரியான பொருளைதான், அனுப்பியுள்ளதாக பதில் அனுப்பினர்.அமேசான் நிறுவனம் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் முத்துக்குமார் வழக்கு தாக்கல் செய்தார்.விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், ''எதிர் மனுதாரர் சேவை குறைபாடு செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளதால், மனுதாரருக்கு, மொபைல் போனுக்கான தொகை, 6,499 ரூபாய், மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 15,000 ரூபாய் வழங்க வேண்டும்,'' என்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ