உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க உத்தரவு

சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க உத்தரவு

கோவை : மாநகராட்சி கிழக்கு மண்டலம், 52வது வார்டுக்கு உட்பட்ட பீளமேடு, பி.எஸ்.ஜி., எஸ்டேட் காலனியில், ரூ.19.90 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல், 51வது வார்டு, ராஜீவ்காந்தி நகரில் ரூ.1.03 கோடியில் தார் சாலை பணியும், எஸ்.ஐ. எச்.எஸ்., காலனி, பாரதி நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளும் நடந்து வருகிறது. 65வது வார்டு, பீளமேடு ரோடு, தேர்வீதி, சவுரிபாளையம் பகுதியில் சாலை விரிவாக்கப்பணிகள் நடந்து வரும் நிலையில், பணிகளை ஆய்வு செய்த கமிஷனர் சிவகுரு பிரபாகரன், தரமாகவும், விரைவாகவும் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை